ஆபரேஷன் காவேரி இந்தியாவின் சூடான் மீட்பு நடவடிக்கை முதல்கட்டமாக 500 பேர் மீட்பு !!
1 min read

ஆபரேஷன் காவேரி இந்தியாவின் சூடான் மீட்பு நடவடிக்கை முதல்கட்டமாக 500 பேர் மீட்பு !!

சூடானில் உள்நாட்டு சண்டை தீவிரமாக உள்ள நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவை நடவடிக்கை எடுத்துள்ளன.

அந்த வகையில் இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் காவேரி மீட்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது முதல்கட்டமாக சூடான் துறைமுகத்தில் இருந்து 500 இந்தியர்கள் கடல்மார்க்கமாக மீட்கப்பட உள்ளனர்.

இந்திய விமானப்படையின் இரண்டு C – 130 J Hercules விமானங்கள் மற்றும் இந்திய கடற்படையின் INS SUMEDHA சுமேதா ரோந்து கப்பல் ஆகியவை சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த INS SUMEDHA கப்பல் தான் தற்போது சூடான் துறைமுகம் சென்றுள்ளது, மேலும் பல நாடுகளின் மீட்பு நடவடிக்கைகளில் இந்திய குடிமக்களும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.