9090 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் ஸ்வாதி ரேடார்கள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • April 1, 2023
  • Comments Off on 9090 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் ஸ்வாதி ரேடார்கள் வாங்க ஒப்பந்தம் !!

நேற்றைய தினம் இந்திய தரைப்படைக்காக இரண்டு ரெஜிமென்ட் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் 12 ஸ்வாதி தளவாட கண்டறிதல் ரேடார்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் இரண்டு நிறுவனங்களுடன் மேற்கொண்டு உள்ளது.

முதலாவதாக Akash Surface to Air Missile Regiments அதாவது ஏற்கனவே இரண்டு ஆகாஷ் வான் பாதுகாப்பு ரெஜிமென்ட்டுகள் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது மற்றும் நான்காவது ரெஜிமென்ட்டுகளுக்கான ஆகாஷ் அமைப்புகளை வாங்குவதற்கு 8160 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் BDL நிறுவனத்துடன் கையெழுத்து ஆகியுள்ளது.

இதில் ஏவுகணைகள், ஏவு வாகனங்கள், உதவி வாகனங்கள், கருவிகள் மற்றும் துணை அமைப்புகள் உள்ளடங்கும் இவை இந்திய தரைப்படையின் வான் பாதுகாப்பு கோர் படையால் இந்திய சீன எல்லையோரம் பயன்படுத்தப்படும்.

அடுத்ததாக BEL பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இந்திய தரைப்படைக்காக 12 ஸ்வாதி தளவாட கண்டறிதல் ரேடார்களை வாங்குவதற்கான 990 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது,

இவற்றை கொண்டு சமவெளிகளில் எதிரி பிரங்கிகள், மோர்ட்டார்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அந்த தகவல் மூலமாக தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.