இந்தியா நேட்டோ நாடுகள் இடையேயான முதல் ராணுவ கூட்டு பயிற்சி !!

ஃபிரான்ஸ் ராணுவம் நடத்தும் ஒராயன் ORION – 23 எனப்படும் பன்னாட்டு ராணுவ கூட்டு பயிற்சிகளில் இந்தியாவும் கலந்து கொள்ள உள்ளது, இந்த பயிற்சிகளில் நேட்டோ நாடுகளும் கலந்து கொள்ள உள்ளன.

வருகிற ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து மே மாதம் 5ஆம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சிகள் ஃபிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள ஒரு விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளன, இதற்காக இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் ஃபிரான்ஸ் செல்ல உள்ளன.

இந்த பயிற்சி தான் நமது ரஃபேல் விமானங்களுக்கு முதலாவது வெளிநாட்டு பயிற்சியாகும், இந்த பயிற்சியில் ஃபிரான்ஸ் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் 19000 வீரர்கள் பங்கு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.