19600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய போர் கப்பல்களுக்கு ஒப்பந்தம் !!
1 min read

19600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய போர் கப்பல்களுக்கு ஒப்பந்தம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மூன்று வெவ்வேறு கப்பல் கட்டுமான தளங்களுடன் சுமார் 19600 கோடி ரூபாய் மதிப்பில் 17 புதிய போர் கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மார்ச் 30ஆம் தேதி செய்து கொண்டுள்ளது.

முதலாவதாக 11 NGOPV – Next Generation Offshore Patrol Vessels எனப்படும் அடுத்த தலைமுறை கடலோர ரோந்து கப்பல்களை கட்ட Buy IDDM திட்டத்தின் கீழ் கோவா கப்பல் கட்டுமான தளம் GSL மற்றும் கொல்கத்தாவின் GRSE கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

கோவாவில் 7 கப்பல்களும் கொல்கத்தாவில் 4 கப்பல்களும் என ஒட்டுமொத்தமாக 11 கப்பல்களை 9781 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டமைக்கப்பட்டு உள்ளனர், அடுத்த ஏழரை ஆண்டுகளில் 110 லட்சம் மணி நேர பணிகள் இதற்கு தேவைப்படும்.

இவற்றை கொண்டு கடற்கொள்ளை எதிர்ப்பு, ஊடுருவல் எதிர்ப்பு, வேட்டை தடுப்பு, கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர வளங்கள் பாதுகாப்பு போன்ற பணிகளை இந்திய கடற்படையால் திறம்பட மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக NGMV – Next Generation Missile Vessels எனப்படும் அடுத்த தலைமுறை ஏவுகணை கலன்களை கட்டமைக்க கொச்சி கப்பல் கட்டுமான தளத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது, 9805 கோடி ரூபாய் செலவில் ஆறு கப்பல்கள் கட்டப்படும்.

இந்த ஆறு கப்பல்களை கட்டுவதள்கு அடுத்த ஒன்பது ஆண்டு காலகட்டத்தில் சுமார் 45 லட்ச மணி நேரம் தேவைப்படும் எனவும் மார்ச் 2027 முதல் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும எனவும் கூறப்படுகிறது.

இவற்றை கொண்டு கடல்சார் தாக்குதல் நடவடிக்கைகள், கப்பல் எதிர்ப்பு தாக்குதல், மலாக்கா மற்றும் சுந்தா ஜலசந்தி போன்ற பகுதிகளை முடக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய கப்பல்கள் அதிவேகமாக ஸ்டெல்த் திறன்களுடன் பயணித்து மின்னல் வேக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கனரக ஏவுகணை தாங்கி கப்பல்களாகும், இவை இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி படைகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.