
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி சுமார் 15,000 கோடி ரூபாய்களை தொட்ட நிலையில் தற்போது இந்தியா ஆஃப்ரிக்க நாடான சூடானுக்கு சத்தமில்லாமல் ஆயுதம் ஏற்றுமதி செய்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுத அமைப்புகளின் பட்டியலில் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பின் பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில் அது எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஆஃப்ரிக்க நாடான சூடான் தனது தரைப்படைக்காக ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிடம் இருந்து வாங்கி பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
சூடானில் 2021 முதல் நிலவி வரும் உள்நாட்டு அரசியல் பிரச்சினை மற்றும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் ஆகியவை காரணமாக ஏற்றுமதி பட்டியலில் சூடானின் பெயரை இந்தியா தவிர்த்து இருக்கலாம் என.கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூடானில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியின் போது சூடான் ராணுவம் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பின் மாதிரிகளை காட்சிபடுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.