இந்திய விமானப்படைக்கான முதல் C – 295 விமானம் தயார் !!

  • Tamil Defense
  • April 21, 2023
  • Comments Off on இந்திய விமானப்படைக்கான முதல் C – 295 விமானம் தயார் !!

இந்திய விமானப்படையின் மழைய ஆவ்ரோ போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக ஏர்பஸ் நிறுவனத்தின் C-295 போக்குவரத்து விமானங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கான ஆர்டர்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் தொழிற்சாலையில் முதலாவது C – 295 ரக போக்குவரத்து விமானம் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படைக்கான வண்ண பூச்சும் பூசப்பட்டு தயாராக உள்ளது.

மேலும் ஸ்பெயின் நாட்டில் இத்தகைய 15 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன, மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் டாடா குழுமத்தால் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த விமானங்களில் இந்திய தயாரிப்பு மின்னனு போர்முறை அமைப்பு இருக்கும் இவற்றால் 50 – 70 வீரர்களை சுமக்க முடியும் மேலும் மீட்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.