கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை வேவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படையினர் கைது கத்தார் !!

பல மாதங்களுக்கு முன்னர் கத்தார் உளவுத்துறையான QSS – Qatar State Security அதிகாரிகளால் கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் Dahra Global Technologies & Consultancy Services எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 முன்னாள் இந்திய கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டனர் என சொல்லாமலேயே அவர்களை தனிமை சிறையில் அடைத்தனர் பின்னர் இஸ்ரேலுக்காக உளவு பணிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது கத்தார் நாட்டின் அதிரகசியமான நீர்மூழ்கி கப்பல் திட்டத்தை பற்றிய தகவல்களை சேகரித்து இஸ்ரேலுக்கு வழங்கியதாக அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அரசு இதை இந்தியாவோ அல்லது இந்தியர்களோ செய்யவில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில் கத்தார் அரசு தரப்பில் தங்களிடம் இதற்கான மின்னனு தகவல் பரிமாற்றத்திற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த ஆதாரங்கள் இந்திய தரப்புக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் மத்திய கிழக்கில் தனது பலத்தை அதிகரித்து அந்த பகுதியின் கடற்படை நிலையை மாற்றியமைக்கும் எண்ணத்தோடு தனது கடற்படையை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தி வலுவாக்கவும் நவீனப்படுத்தவும் விரும்பி பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் நான்கு கார்வெட் ரக போர் கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் தாங்கி கப்பல், இரண்டு இலகுரக நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 40 வெவ்வேறு வகையான ரோந்து கலன்கள் ஆகியவற்றிற்கான ஆர்டர்களை கொடுத்துள்ளது.

இதில் மேற்குறிப்பிட்ட இரண்டு நீர்மூழ்கி கப்பல்களில் பல உலோகங்களின் கலவையான மெட்டா உலோக பூச்சு பூசப்பட திட்டமிட்டு இருந்தனர் இதன் காரணமாக அந்த நீர்மூழ்கிகளை கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பது மிக மிக கடினமாகும், மேலும் வளைகுடா நாடுகளில் நீர்மூழ்கி கப்பல் இயக்கும் முதல் நாடாக கத்தார் பெயர் எடுக்கும்.

இந்த நீர்மூழ்கி கப்பல்கள் பற்றிய அதிரகசியமான தகவல்களை முன்னாள் இந்திய கடற்படையினர் திரட்டி இஸ்ரேலுக்கு பரிமாற்றம் செய்ததாக கத்தார் தரப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.