அமெரிக்க கொள்கைளை விரும்பாத ஐரோப்பிய தலைவர்கள் – ஃபிரான்ஸ் அதிபருக்கு அடுத்தபடியாக கருத்து வெளியிட்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் !!

  • Tamil Defense
  • April 14, 2023
  • Comments Off on அமெரிக்க கொள்கைளை விரும்பாத ஐரோப்பிய தலைவர்கள் – ஃபிரான்ஸ் அதிபருக்கு அடுத்தபடியாக கருத்து வெளியிட்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் !!

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் கொள்கைகளை வகுப்பதில் தலையாய பங்கு வகிக்கும் அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் தான் முன்னாள் பெல்ஜியம் பிரதமர் சால்ஸ் மிஷெல் இவரது சமீபத்திய கருத்து மிகப்பெரிய பரபரப்பை உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நிலைபாட்டை பின்பற்ற கூடாது தமக்கென்று தனித்துவமான சுதந்திரமான கொள்கைகளை ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்றோரு கருத்தை முன்வைத்திருந்தார் அது தற்போது உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது.

இந்த நிலையில் சால்ஸ் மிஷெல் ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் தவிர இத்தகைய அமெரிக்க பிடியிலிருந்து அல்லது தாக்கத்தில் இருந்து சுதந்திர கொண்ட கொள்கைகளை விரும்பும் பல ஐரோப்பிய தலைவர்கள் இருப்பதாகவும் சொல்லப்போனால் ஃபிரெஞ்சு அதிபரின் கருத்து பல ஐரோப்பிய தலைவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் கருத்தாகும் என கூறி உள்ளார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் பல சிக்கல்கள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் உள்ளன, எப்போதும் அமெரிக்காவின் நிலைபாட்டையும் கொள்கைகளையும் ஐரோப்பிய நாடுகள் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்றால் அதற்கு பதில் முடியாது என்பதாகும் எனவும் கூறி உள்ளார்.