கத்தார் சிறையில் உள்ள முன்னாள் இந்திய கடற்படையினர் பணிநீக்கம் !!

  • Tamil Defense
  • April 25, 2023
  • Comments Off on கத்தார் சிறையில் உள்ள முன்னாள் இந்திய கடற்படையினர் பணிநீக்கம் !!

கத்தார் நாட்டில் இயங்கி வரும் தாஹ்ரா க்ளோபல் சர்வீசஸ் எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் இஸ்ரேலுக்காக வேவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர்.

ஏறத்தாழ 10 மாதங்களாக தனிமை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது மேலும் இவர்களின் வழக்குக்கு ஆகும் செலவையும் அந்த பெண் நிறுவனமே ஏற்று கொண்டு இருந்தது மேலும் எட்டு பேரின் குடும்பத்தினரையும் கத்தார் கொண்டு சென்று கவனித்து கொண்டது.

இந்த நிலையில் தற்போது எட்டு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், கூடவே 150 முன்னாள் இந்திய கடற்படையினரும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், இவர்கள் அனைவருக்கும் பணி நீக்க தொகுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் மே 31 நிறுவனம் மூடப்பட உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான முன்னாள் ஒமன் விமானப்படை அதிகாரியான காமிஸ் அல் அஜ்மி மற்றும் சர்வதேச பிரிவுகள் தலைவரான மேஜர் ஜெனரல் தாரிக் காலித் அல் ஒபைத்லி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வழக்கு விசாரணைக்கு ஆகும் செலவுகள் இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக ஏற்று கொண்டு உள்ளதாக அறிவித்துள்ளது கூடுதல் தகவலாகும்.