நேட்டோவின் கதவுகள் இந்தியாவுக்கு திறந்திருக்கும் அமெரிக்க நேட்டோ தூதர் !!

  • Tamil Defense
  • April 3, 2023
  • Comments Off on நேட்டோவின் கதவுகள் இந்தியாவுக்கு திறந்திருக்கும் அமெரிக்க நேட்டோ தூதர் !!

NATO – North Atlantic Treaty Organisation எனப்படும் நேட்டோ கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர் ஜூலியான் ஸ்மித் நேட்டோவின் கதவுகள் இந்தியாவுக்காக திறந்து இருக்கும் இந்தியா விரும்பினால் இணைந்து செயல்பட தயார் என கூறி உள்ளார்.

அதாவது நேட்டோ உலகம் முழுவதும் 40 நாடுகளுடன் இணைந்து புவிசார் அரசியல், பாதுகாப்பு குறிப்பாக நவீனமயமாக்கல் ஆகிய பகுதிகளில் செயலாற்றி வருவதாகவும், இந்தியா விரும்பினால் இதைவிட மிகப்பெரிய அளவில் நேட்டோ ஒத்துழைப்பு தரும் எனவும்

நேட்டோ அமைப்பை உலகளாவிய ராணுவ கூட்டமைப்பாக மாற்றுவது பற்றியோ வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை தவிரத்து வேறு நாடுகளை உறுப்பினர்களாக்கும் திட்டம் நேட்டோவுக்கு இல்லை எனவும்

அதே நேரத்தில் இந்தோ பசிஃபிக் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளோம், ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் எங்களுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன

அந்த வகையில் அதே பிராந்தியத்தை சேர்ந்த இந்தியாவுடனும் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளோம், 7 ஆண்டுகள் முன்னர் இந்த நோக்கம் எங்களுக்கு இல்லை ஆனால் இப்போது சீன அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனை அவர் தெரிவித்த கையோடு கடந்த ஆண்டு மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகள் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டன இந்த ஆண்டு நடைபெற உள்ள கூட்டத்தில் இந்தியாவின் நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.