தைவான் விவகாரத்தில் அமெரிக்க நிலைபாட்டை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டாம் ஃபிரான்ஸ் அதிபர் !!

ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் தனது சீன அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு நேற்று நாடு திரும்பினார் அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின் போது அவர் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைபாட்டை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற கூடாது அதாவது சீனா தைவான் மீது போர் தொடுத்தால் ஐரோப்பிய நாடுகள் அதில் கலந்து கொள்ள கூடாது என கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க நிலைபாட்டை ஏற்று கொண்டு அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப ஆடி நமக்கு தொடர்பில்லாத சிக்கல்களில் தலையிடுவது நமக்கு அதாவது ஐரோப்பாவுக்கு தேவையற்றது என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள அதே நேரத்தில் பலத்த கண்டனங்களும் ஃபிரெஞ்சு அதிபருக்கு எதிராக கிளம்பி உள்ளது,குறிப்பாக அமெரிக்க அரசியல் தலைவர்கள் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா பணத்தை கொட்டும் போது இந்த கருத்து வந்துள்ளது ஐரோப்பா அத்தகைய நிலைபாட்டை எடுத்தால் உக்ரைன் விவகாரத்தை அவர்களே கையாளட்டும் எனவும்

புவிசார் அரசியல் நிபுணர்கள் நீண்ட காலமாகவே ஃபிரெஞ்சு வெளியுறவு கொள்கை சுதந்திரமான செயல்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது பலமுறை அமெரிக்க கருத்துக்கு நேர்மாறான கருத்துக்களை கொண்டு இருந்ததாகவும் ஆனால் தற்போதைய இந்த கருத்துக்களை பேசியது சரியல்ல எனவும்

இத்தகைய கருத்துக்கள் மேலும் சீனாவை ஊக்குவிக்கும் காரணம் தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்காவுடன் ஐரோப்பா பிரச்சனை செய்ய வராது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி தைவான் மீதான படையெடுப்பை ஊக்குவிப்பதாக மாறி விடும் என கூறுகின்றனர்.