இந்தியாவின் முதல் கூட்டுபடைகள் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் பிபின் ராவத் ஒருங்கிணைந்த படைப்பிரிவுகளை உருவாக்கும் நோக்கில் மிகவும் தீவிரமாக செயலாற்றி வந்தார் இந்த நிலையில் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.
அதற்கடுத்து 9 மாதங்கள் கழித்து தான் நாட்டின் இரண்டாவது கூட்டுபடைகள் தலைமை தளபதியாக ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டார், அவர் ஜெனரல் பிபின் ராவத் விட்டு சென்ற பணிகளை மேற்கொள்வதில் தற்போது பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
அதாவது ஜெனரல் அனில் சவுகான் முப்படைகளிடம் இருந்தும் ஒருமனதான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை பெற வேண்டும் தற்போது தரைப்படை மற்றும் கடற்படை இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விமானப்படை தயக்கம் காட்டி வருகிறது.
இதற்கு காரணம் இந்திய விமானப்படை தன்னிடம் உள்ள குறிப்பிட்ட அளவிலான தளவாடங்களை பிரித்து கொடுக்க தயங்குவதே ஆகும் ஆகவே முதல்கட்டமாக போக்குவரத்து மற்றும் சப்ளை, பராமரிப்பு, உதவி அமைப்புகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டு உள்ளனர்.
மூன்றே ஆண்டுகளில் ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் உருவாக்கப்படவிருந்த நிலையில் தற்போது தவிர்க்க முடியாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது, இந்தியா சீன எல்லைக்கு -2, பாகிஸ்தான் எல்லைக்கு -1, வான் பாதுகாப்புக்கு -1 , கடல்சார் நடவடிக்கைகளுக்கு -1 என 5 கட்டளையகங்கள் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.