ஒருங்கிணைந்த தளபதிகள் கருத்தரங்கு – 2023 !!

  • Tamil Defense
  • April 11, 2023
  • Comments Off on ஒருங்கிணைந்த தளபதிகள் கருத்தரங்கு – 2023 !!

எல்லா ஆண்டும் முப்படைகளை சேர்ந்த மூத்த தளபதிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கருத்தரங்கம் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த மூன்று நாள் கருத்தரங்கு Ready Resurgent Relevant அதாவது தயார் – மறுமலர்ச்சி – தொடர்புடைய எனும் தலைப்பை அடிப்படையாக கொண்டு நடைபெற்றது, இதில் முப்படைகள் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

குறிப்பாக பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, பாதுகாப்பு துறை ஆராய்ச்சி, நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த கட்டளையகங்களை உருவாக்கும் பணிகள், விண்வெளி பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல்மயமாக்கல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

பிரதமர் மோடி முப்படைகள் நாட்டுக்கு ஆற்றி வரும் பணிகள் குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை சுட்டிக்காட்டி நன்றி கூறினார் மேலும் நாட்டை பாதுகாக்க எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.