வங்கதேசம் அருகே சீன சர்வே கப்பல் ஊடுருவல் -கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • April 5, 2023
  • Comments Off on வங்கதேசம் அருகே சீன சர்வே கப்பல் ஊடுருவல் -கண்காணிக்கும் இந்திய கடற்படை !!

வங்கதேச நாட்டின் சிறப்பு பொருளாதார மணடலத்திற்குள் “Hai Yong Shi You 60” ஹாய் யாங் ஷி யூ – 60 என்ற சீன சர்வே கப்பல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்து வங்கதேசம் சென்று ஜனவரி மாதம் முதல் மேற்குறிப்பிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, வருகிற மே மாதம் இது முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய கடற்படை பல மாதங்களாக இந்த கப்பலை கண்காணித்து வருவதாகும், இந்திய எல்லைக்குள் இந்த கப்பல் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் IFC – IOR Information Fusion Centre – Indian Ocean Region எனப்படும் இந்திய பெருங்கடல் பகுதிக்கான தகவல் ஒருங்கிணைப்பு மையமும் செயற்கைகோள் மற்றும் வணிக கப்பல்கள், போர் கப்பல்கள் அளிக்கும் தகவல்களை கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.