பிரங்கி படையின் நவீனமயமாக்கலில் மெத்தனம் காட்டமாக விமர்சித்த தலைமை தணிக்கையாளர் !!

  • Tamil Defense
  • April 3, 2023
  • Comments Off on பிரங்கி படையின் நவீனமயமாக்கலில் மெத்தனம் காட்டமாக விமர்சித்த தலைமை தணிக்கையாளர் !!

இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளர் Comptroller & Auditor General CAG அவர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்று இந்திய தரைப்படையை காட்டமாக விமர்சித்து உள்ளது.

அதாவது இந்திய தரைப்படையின் பிரங்கி படை நவீனமயமாக்கல் கொள்கை கடந்த 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இந்த கொள்கையின் நோக்கம் 2027ஆம் ஆண்டு வாக்கில் இந்திய தரைப்படையில் சுமார் 2800 அதிநவீன பிரங்கிகளை இணைப்பதாகும்.

ஆனால் CAG அறிக்கையில் இது நடைபெறுவதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது காரணம் இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் மெத்தனம் காட்டப்படுவதாகவும் கடந்த 2022 மார்ச் வரை திட்டமிட்டதில் 8% மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்திய தரைப்படை கடந்த இருபது ஆண்டுகளாக ஆறு வெவ்வேறு வகையான பிரங்கிகளை இணைக்க வேண்டிய இடத்தில் தற்போது வரை மூன்று மட்டுமே ஒப்பந்தமாக மாறியுள்ளது இது ஒட்டுமொத்த திட்டத்தில் வெறும் 17% தான் எனவும்

ஒட்டுமொத்த திட்டத்தில் 77% பங்கு கொண்ட இரண்டு பிரங்கி கொள்முதல் திட்டங்கள் இதுவரை சாத்தியமாகவில்லை இன்னமும் பல பிரங்கிகள் 1965ஆம் ஆண்டு காலகட்டத்தில் படையில் இணைக்கப்பட்டவை தான் மேலும் சில திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன எனவும்

இதற்கு காரணம் பல்வேறு மட்டங்களில் காட்டப்படும் கால தாமதம் ஆகவே இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய தரைப்படை ஆகியவை இவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமின்றி பிரங்கி படை நவீனமயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.