1700 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய கடற்படைக்கு கடலோர பாதுகாப்பு பிரம்மாஸ் அமைப்புகள் !!

  • Tamil Defense
  • April 1, 2023
  • Comments Off on 1700 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய கடற்படைக்கு கடலோர பாதுகாப்பு பிரம்மாஸ் அமைப்புகள் !!

இந்திய கடற்படைக்காக சுமார் 1700 கோடி ரூபாய் மதிப்புள்ள தொலைதூர அடுத்த தலைமுறை கடல்சார் நடமாடும் ஏவுகணை பேட்டரிகள் NGMMCB – LR Next Generation Mobile Missile Batteries Long Range வாங்க BAPL Brahmos Aerospace Private Limited நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.

இந்த ஏவுகணை அமைப்புகளை தயாரிக்க நான்கு ஆண்டு காலகட்டத்தில் 90,000 மணி நேரம் தேவைப்படும் இவற்றின் டெலிவரி 2027 ஆம் ஆண்டு துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை அமைப்புகளை கொண்டு இந்திய கடற்படை கடற்கரை பகுதிகளில் இருந்து இந்திய கடல் பகுதியில் ஊடுருவும் எதிரி கப்பல்களை தாக்கி அழிக்க முடியும் என்பது இவற்றின் சிறப்பாகும்.