இனி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் துணை ராணுவ கான்ஸ்டபிள் தேர்வு !!

மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவின்படி இனி துணை ராணுவ படைகளுக்கான கான்ஸ்டபிள் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட உள்ளன.

தற்போது ஆண்டுதோறும் Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வாணையம் தான் இந்த தேர்வுகளை நடத்தி வருகிறது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தான் இது நடத்தப்படுகிறது.

இனி இந்த நிலை மாறி தமிழ், மலையாளம், கன்னடம், அஸ்ஸாமி, வங்கமொழி, தெலுங்கு, மராட்டியம், பஞ்சாபி, உருது, ஒரிய, மணிப்பூரி, கொங்கனி, குஜராத்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளிலும் எழுத முடியும்.

இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் மாநில இளைஞர்களிடம் இதை எடுத்து செல்லவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.