நேற்று முதல் பஞ்சாபின் பதிண்டாவில் உள்ள ராணுவ தளத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 வீரர்கள் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த சம்பவம் முடிவுக்கு வருவதற்கு முன்னர் ஐந்தாவதாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது.
தரைப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது பணி நேரம் முடிந்து அறைக்கு திரும்பிய வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், அருகிலேயே அவரது துப்பாக்கி உடனான மேகஸினும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
அவரது தலையின் வலதுபக்கத்தில் மண்டை ஒடு மற்றும் மூளையை தோட்டா துளைத்து சென்றுள்ளது, அவரது உடலை சக ராணுவத்தினர் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட வீரர் 11ஆம் தேதி தான் விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பி உள்ளார், என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விசாரணையை தரைப்படை மற்றும் பஞ்சாப் காவல்துறைகள் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.