பிரங்கி படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க தரைப்படைக்கு அரசு அனுமதி !!
1 min read

பிரங்கி படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க தரைப்படைக்கு அரசு அனுமதி !!

இந்திய தரைப்படை தனது Artillery அதாவது பிரங்கி படைப்பிரிவில் பெண் அதிகாரிகளை சேர்க்க விரும்பி அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில் தற்போது அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

பாஜக வதோதரா பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்செய் பாட் மத்திய அரசுக்கு பிரங்கி படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க திட்டம் உள்ளதா அப்படியானால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என எழுப்பிய கேள்விக்கு

இந்த முடிவு மார்ச் 20ஆம் தேதி எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பாராளுமன்றத்தின் மக்களவையில் தனது ஒரு வரி பதிலில் தெரிவித்து உள்ளார்.

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ஜனவரி மாதம் இதற்கான கோரிக்கை மனு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்திய தரைப்படையில் காலாட்படைக்கு பிறகு மிகப்பெரிய படை பிரங்கி படையாகும், இதில் எத்தனை பெண் அதிகாரிகள் இணைய உள்ளனர் என்பது இந்த ஆண்டில் சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தின் பயிற்சி நிறைவு விழாவில் தெரிய வரும்.

தற்போது காலாட்படை மற்றும் டாங்கி படை ஆகிய நேரடி சண்டையிடும் படைகளை தவிரத்து அனைத்து தரைப்படை படைகளிலும் பெண் அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகளை பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 6993 பெண் அதிகாரிகள் ASC, AOC, RVC , AEC, JAG Br, CMP, EME, AMC, ADC,MNS ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர், அதிலும் RVC எனப்படும் விலங்குகள் மருத்துவ பிரிவில் பெண் அதிகாரிகளை சேர்க்க மார்ச்-1 அனுமதி அளிக்கப்பட்டு நான்கு பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.