எதிரிகளையும் நண்பர்களையும் வேவு பார்த்த அமெரிக்கா முக்கிய தகவல்கள் கசிவு !!

  • Tamil Defense
  • April 10, 2023
  • Comments Off on எதிரிகளையும் நண்பர்களையும் வேவு பார்த்த அமெரிக்கா முக்கிய தகவல்கள் கசிவு !!

அமெரிக்காவின் முக்கிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த ஆவணங்கள் சமுக வலைதளத்தில் கசிந்து உலகளாவிய ரீதியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன, இவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் இருந்து தான் கசிந்துள்ளன.

அதாவது அமெரிக்க படை தளபதிகள் மற்றும் கூட்டுபடை தலைமை தளபதி போன்ற முக்கிய உயர் அதிகாரிகளின் பார்வைக்கு மட்டுமே செல்ல வேண்டிய இந்த ஆவணங்கள் கடைநிலை ஊழியர் வரைக்கும் கிடைத்து அது சமுக வலைதளங்களில் கசிந்து அதிகளவில் பகிரப்பட்டுள்ளன தற்போது இது எப்படி நடந்தது என அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

இந்த ஆவணங்களில் அமெரிக்க உளவுத்துறையான CIA நட்பு நாடுகளையும் எதிரி நாடுகளையும் ஒரு சேர கண்காணித்துள்ளது அம்பலமாகி உள்ளது, இந்த தகவல் அமெரிக்காவின் பல நட்பு நாடுகளிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ள அராபிய நட்பு நாடுகள், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல், தென்கொரியா, போர் நடைபெற்று வரும் உக்ரைன் போன்ற பல முக்கிய நட்பு நாடுகளிலும் உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது, பல நாடுகளில் தலைவர்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் இடத்தில் கூட இருக்கும் முக்கிய அதிகாரிகளை கூட அமெரிக்கா விலைக்கு வாங்கியுள்ளது.

மேலும் ரஷ்யா, சீனா, மாலி, வடகொரியா போன்ற நாடுகளின் எதிர்கால ராணுவ திட்டங்கள், அணு ஆயுத திட்டங்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களும் இந்த ஆவணங்களில் உள்ளதாக கூறப்படுகிறது, உக்ரைன் தங்களது பலவீனத்தை இந்த ஆவணங்கள் வெளிபடுத்தி உள்ளதாக அமெரிக்கா மீது கோபத்தில் உள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் அனைத்து அமைப்புகளும் அதாவதுவெளிநாட்டு உளவு அமைப்பான CIA ,NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமை, ராணுவ உளவுத்துறையான DIA எனப்படும் பாதுகாப்பு உளவு முகமை மற்றும் பல பில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க உளவு செயற்கைகோள்களை இயக்கும் NRO ஆகியவற்றின் ரகசியங்களும் வெளிவந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட NRO எனப்படும் தேசிய உளவு அலுவலகம் தான் ஒட்டுமொத்த அமெரிக்க உளவுத்துறையிலேயே மிக மிக ரகசியமான அமைப்பாகும், இதுவரை வெளி உலகிற்கு அமெரிக்கா அறிவிக்காத அதிநவீன LAPIS எனப்படும் உளவு செயற்கைகோள் அமைப்பு பற்றிய தகவல்கள் கூட கசிந்துள்ளது .

இதை தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவ படைகள் ஆகியவை இணைந்து Criminal Investigation அதாவது கிரிமினல் விசாரணையை நடத்த உத்தரவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.