அமெரிக்க கடற்படை, மரைன் கோர் மற்றும் இங்கிலாந்து கடற்படை, மரைன் படைகள் இடையே ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • April 14, 2023
  • Comments Off on அமெரிக்க கடற்படை, மரைன் கோர் மற்றும் இங்கிலாந்து கடற்படை, மரைன் படைகள் இடையே ஒப்பந்தம் !!

சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் கடற்படை தளத்தில் உள்ள தளபதியின் முகாம் அலுவலகத்தில் வைத்து அமெரிக்க கடற்படை, மரைன் கோர் மற்றும் இங்கிலாந்து கடற்படை, மரைன் கோர் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது இரு நாட்டு கடற்படைகள் மற்றும் மரைன் கோர் படைகள் ஒருங்கிணைந்து இருநாடுகளின் கடலோர பகுதிகள் அருகே மிக நுட்பமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலும் கடல் நிலம் வான் பகுதிகளில் சிறப்பாக இயங்கவும் வழிவகை செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் காரணமாக இனி இருநாட்டு கடற்படைகள் மற்றும் மரைன் கோர் படைவீரர்கள் மாறி மாறி இருநாடுகளுக்கும் சென்று ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்படுவர்.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா சார்பில் லெஃப்டினன்ட் ஜெனரல் டேவிட் ஃபர்னெஸ் மற்றும் இங்கிலாந்து சார்பில் வைஸ் அட்மிரல் மார்ட்டின் கான்னெல் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

உடன் அமெரிக்க மரைன் கோரின் லெஃப்டினன்ட் கர்னல் நிகோல் ஜாண்சன், லெஃப்டினன்ட் கர்னல் ப்ராட் ஃப்லூட்ஸ், மேஜர் ஆரோன் ஹூட் மற்றும் இங்கிலாந்து மரைன் கோரின் ப்ரிகேடியர் பால் மேனார்ட், கர்னல் மேட் சர்ச்வூட், ப்ரிகேடியர் மார்க் டாட்டென் ஆகியோர் இருந்தனர்.