Day: April 14, 2023

அமெரிக்க கடற்படை, மரைன் கோர் மற்றும் இங்கிலாந்து கடற்படை, மரைன் படைகள் இடையே ஒப்பந்தம் !!

April 14, 2023

சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் கடற்படை தளத்தில் உள்ள தளபதியின் முகாம் அலுவலகத்தில் வைத்து அமெரிக்க கடற்படை, மரைன் கோர் மற்றும் இங்கிலாந்து கடற்படை, மரைன் கோர் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது இரு நாட்டு கடற்படைகள் மற்றும் மரைன் கோர் படைகள் ஒருங்கிணைந்து இருநாடுகளின் கடலோர பகுதிகள் அருகே மிக நுட்பமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலும் கடல் நிலம் வான் பகுதிகளில் சிறப்பாக இயங்கவும் வழிவகை செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த […]

Read More

இந்தியா மற்றும் ரோமேனியா இடையே முதலாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் !!

April 14, 2023

இந்தியா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகள் இடையே முதல்முறையாக ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆகியுள்ளது, இது இருநாடுகள் இடையேயான உறவில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ராணுவ பயிற்சி, ராணுவ தளவாடங்கள், ராணுவ மருத்துவம், ராணுவ தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், ராணுவ தொழில்நுட்ப உதவி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் தலைநகர் தில்லியில் இந்தியா ரோமேனியா இருதரப்பு சந்திப்பின் போது கையெழுத்தானது, […]

Read More

அமெரிக்க கொள்கைளை விரும்பாத ஐரோப்பிய தலைவர்கள் – ஃபிரான்ஸ் அதிபருக்கு அடுத்தபடியாக கருத்து வெளியிட்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் !!

April 14, 2023

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் கொள்கைகளை வகுப்பதில் தலையாய பங்கு வகிக்கும் அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் தான் முன்னாள் பெல்ஜியம் பிரதமர் சால்ஸ் மிஷெல் இவரது சமீபத்திய கருத்து மிகப்பெரிய பரபரப்பை உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஃபிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரான் தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் நிலைபாட்டை பின்பற்ற கூடாது தமக்கென்று தனித்துவமான சுதந்திரமான கொள்கைகளை ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்றோரு கருத்தை […]

Read More

இருதரப்பு பாதுகாப்பு திட்ட வரைவை 10 ஆண்டுகளில் நிறைவேற்ற அமெரிக்கா ஃபிலிப்பைன்ஸ் திட்டம் !!

April 14, 2023

அமெரிக்கா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டு காலகட்டத்திற்குள் இருதரப்பு பாதுகாப்பு திட்ட வரைவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக்யூ மனாலோ பேசும்போது இருதரப்பும் தங்களது பங்களிப்பை மீண்டும் இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும் இந்த உறவு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒழுங்கை நிலைநாட்ட முக்கிய பங்காற்றும் என கூறியுள்ளார். முன்னாள் மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பேசும்போது அமெரிக்கா ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சீனா தைவான் […]

Read More

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்ல தேவையில்லை அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி !!

April 14, 2023

பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு அந்நாட்டு பாராளுமன்றத்தில் நீதித்துறை சீர்திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்ய விரும்புகிறது இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கூட அரசால் கடந்து செல்ல முடியும். இந்த சட்டம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை குறைத்து அரசின் அதிகாரங்களை வலுவாக்கும் சட்ட மசோதா என கூறி இஸ்ரேலிய எதிர்கட்சிகள், பொதுமக்களில் ஒரு பெரும் பிரிவினர், ரிசர்வ் படை வீரர்கள் ஆகியோர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த […]

Read More

இந்தியா நேட்டோ நாடுகள் இடையேயான முதல் ராணுவ கூட்டு பயிற்சி !!

April 14, 2023

ஃபிரான்ஸ் ராணுவம் நடத்தும் ஒராயன் ORION – 23 எனப்படும் பன்னாட்டு ராணுவ கூட்டு பயிற்சிகளில் இந்தியாவும் கலந்து கொள்ள உள்ளது, இந்த பயிற்சிகளில் நேட்டோ நாடுகளும் கலந்து கொள்ள உள்ளன. வருகிற ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து மே மாதம் 5ஆம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சிகள் ஃபிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள ஒரு விமானப்படை தளத்தில் நடைபெற உள்ளன, இதற்காக இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் ஃபிரான்ஸ் செல்ல உள்ளன. இந்த பயிற்சி […]

Read More

முதல்முறையாக கூட்டு பயிற்சி காரணமாக இந்தியாவுக்கு போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா !!

April 14, 2023

இந்திய மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இடையே கடந்த 2004ஆம் ஆண்டு முதல் Cope India என்ற பெயரில் இரு தரப்பு கூட்டு பயிற்சிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான Cope India 2023 கூட்டு பயிற்சிகள் மேற்கு வங்க மாநிலம் பானாகர் மற்றும் கலைகுண்டா விமானப்படை தளங்களிலும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா விமானப்படை தளத்திலும் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி வருகிற 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முதல்கட்ட பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன […]

Read More