பனிப்போர் காலத்தில் மாஸ்கோவில் அமெரிக்க உளவாளிகள் பின்பற்றிய 10 விதிமுறைகள் !!

  • Tamil Defense
  • April 4, 2023
  • Comments Off on பனிப்போர் காலத்தில் மாஸ்கோவில் அமெரிக்க உளவாளிகள் பின்பற்றிய 10 விதிமுறைகள் !!

பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ஒன்றிய ஆதரவு நாடுகள் மற்றும் சோவியத் எதிர்ப்பு நாடுகள் போன்றவை அமெரிக்க மற்றும் சோவியத் ரஷ்ய உளவாளிகளின் சொர்க்கப்புரியாக, இருதரப்பும் சர்வ சுதந்திரமாக இயங்கி வந்தன.

ஆனால் சோவியத் மற்றும் இன்றைய ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் நிலைமை வேறு அங்கு இயங்கிய அமெரிக்க CIA உளவாளிகள் மிகப்பெரிய ஆபத்திற்கு இடையே பணியாற்ற வேண்டியிருந்தது, மாட்டி கொண்டால் சித்திரவதை மரணம் உறுதி.

ஆகவே பல அமெரிக்க உளவாளிகள் மீது சோவியத் KGB உளவு அமைப்பு தனது கண்ணை வைத்தவுடன் மீண்டும் நாடு திரும்ப வேண்டியதாயிற்று, இந்த நிலையில் கடும் சிக்கல்களுக்கு இடையே மாஸ்கோவில் அமெரிக்க உளவாளிகள் 10 விதிகளை கையாண்டு இயங்கி வந்தனர்.

1) எதையும் நம்ப வேண்டாம்

இது பொதுவாக எல்லாரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும் ஆனால் அமெரிக்க உளவாளிகளுக்கு இது இன்றியமையாதது எதையும் சந்தேக கண்ணோடு பாரக்க வேண்டிய அவசியம் இருந்தது.

2) உள்ளூனர்வுகளை மதிக்க வேண்டும்

ஒரு விஷயம் சரியில்லை ஏதோ பிரச்சினை உள்ளது என தோன்றினால் அதனை உடனடியாக மதித்து அதை புறந்தள்ளாமல் அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்.

3) எல்லோரும் எதிரிகள் தான்

அதாவது சோவியத் ரஷ்யாவில் வாடகை கார் ஓட்டுநர் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை யார் வேண்டுமானாலும் ரஷ்ய உளவுத்துறை ஆட்களாக இருக்கலாம் ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

4) நீங்கள் தனியாக இல்லை

அமெரிக்க உளவாளிகள் தங்களது பாதுகாப்பு மிக்க தங்குமிடங்களில் கூட எப்போதும் தனியாக இருக்க வாய்ப்பில்லை இருப்பிடம் கண்காணிக்கப்படலாம் அல்லது ஒட்டு கேட்கும் கருவிகள் இருக்கலாம்.

5) கூட்டத்துடன் கூட்டமாக கலந்து விடுவது

எந்த வித சந்தேகமும் இன்றி சாதாரண மனிதர்களை போல தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் செயலாற்றுவது.

6) பாதையை மாற்றி கொண்டே இருப்பது

சந்தேகம் உள்ள அமெரிக்க உளவாளிகள் மீது ரஷ்ய கண்காணிப்பு அதிகமாக இருந்தது ஆகவே தங்களது நடவடிக்கையை எப்போதும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் முழு கண்காணிப்பு வட்டத்திற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகும்.

7) அமைதி மூலமாக மனநிறைவு ஏற்படுத்துதல்

தான்தோன்றித்தனமாக செயல்பட கூடாது தரப்பட்ட பணியை சத்தமின்றி செய்ய வேண்டும் அத்தகைய அமைதி மூலமாக எதிரிக்கு சந்தேகம் எழாத வண்ணம் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

8) எதிரியை சீண்ட கூடாது

ஏதேனும் ஹீரோயிசம் செய்து எதிரியை சீண்டி சிக்கி விடக்கூடாது, சந்தேகம் ஏற்பட்டால் வேடம் கலைந்து விடும்.

9) அனைத்தையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்

தகவல் பெறவோ அல்லது தகவல் பரிமாறவோ நடைபெறும் சந்திப்புகளுக்கான இடத்தை நாமே தேர்வு செய்ய வேண்டும் எதுவும் நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.

10) ஒன்றை மட்டுமே நம்பியிருக்க கூடாது

மாஸ்கோவில் சூழல்கள் மாறி கொண்டே இருக்கும் ஆகவே ஒரே ஒரு நபரையோ அல்லது இடத்தையோ நம்பியிருக்க கூடாது பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வது அவசியம் ஆகும்.

இந்த விதிமுறைகள் பற்றி அமெரிக்காவின் சிறந்த உளவாளிகளில் ஒருவராக கருதப்படும் டோனி மென்டெஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.