இந்திய விமானப்படை சமீபத்தில் க்ரூப் கேப்டன் ஷாஸியா தில்மி எனும் மூத்த பெண் அதிகாரியை மேற்கு எல்லையோரம் அதாவது பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கி வரும் ஹெலிகாப்டர் படையணி ஒன்றின் கட்டளை அதிகாரியாக நியமித்து உள்ளது .
இவர் 2003ஆம் ஆண்டு படையில் இணைந்தார், தற்போது வரை 2800 மணி நேரம் பறக்கும் அனுபவத்தை பெற்றுள்ளார் இரண்டு முறை தனது பிராந்திய தளபதியிடம் இருந்து பாராட்டு விருதை பெற்றுள்ளார்.
இவர் தான் இந்திய விமானப்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் இயக்க பயிற்சியாளர் என்பதும் இந்திய விமானப்படையில் நிரந்தர பணியை பெற்ற முதல் பெண் அதிகாரி என்பதும் இவரது சிறப்புகள் ஆகும்.