
இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சமீபத்தில் ABP ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களுக்கான போர் விமான தேர்வு பற்றிய முக்கிய செய்தியை தெரிவித்தார்.
அதாவது அமெரிக்காவின் BOEING F/A – 18 மற்றும் ஃபிரான்ஸ் நாட்டின் Dassault Rafale M ஆகிய இரு விமானங்களும் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்சத்தில் இரண்டுமே இந்திய கடற்படையால் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும்
மேலும் இந்திய விமானப்படையிலும் ரஃபேல் போர் விமானம் பயன்பாட்டில் இருப்பதால் பல விஷயங்களில் சாதகமாக இருக்கும் இருந்தாலும் இனி அரசு தான் இரண்டில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பேசும் போது இரண்டு போர் விமானங்களுமே தங்களுக்கான தனித்துவ குணாதிசயங்களை கொண்டவை ஆகும் எனவும் இரண்டுமே சிறப்பான விமானங்கள் தான் எனவும் கூறினார்.