தைவான் விவகாரத்தில் சீனாவுடன் போர் மூண்டால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்காவின் ஆயுதங்கள் காலியாகி விடும் அமெரிக்க அறிக்கை !!

  • Tamil Defense
  • March 20, 2023
  • Comments Off on தைவான் விவகாரத்தில் சீனாவுடன் போர் மூண்டால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்காவின் ஆயுதங்கள் காலியாகி விடும் அமெரிக்க அறிக்கை !!

சமீபத்தில் அமெரிக்க ராணுவம் தைவான் விவகாரத்தில் சீனாவுடன் போர் மூண்டால் என்ன நடக்கும் என்பது பற்றி நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் அமெரிக்க பாதுகாப்பு துறை வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் போர் முண்டால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்காவின் துல்லிய தாக்குதல் ஆயுதங்களின் கையிருப்பு தீர்ந்துவிடும் என தெரிய வந்துள்ளது ஆகவே ஹவாய் தீவை தளமாக கொண்டு இயங்கும் அமெரிக்காவின் இந்தோ பசிஃபிக் கட்டளையகமான INDOPACOM சுமார் 15 பில்லியன் டாலர்களை பாதுகாப்பு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டில் சுமார் 840 பில்லியன் டாலர்களை செலவிட அதிபர் பைடனுடைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது, அதில் INDOPACOM உடைய இந்த கோரிக்கை பிரதானமாக பார்க்கப்படுகிறது.

இந்த 15 பில்லியன் டாலர் நிதியை வைத்து கொண்டு ஃபிலிப்பைன்ஸ் அருகேயுள்ள குவாம் தளத்தில் 1.6 பில்லியன் டாலர் மதிப்பில் ஏவுகணை தடுப்பு அமைப்புகள், அமெரிக்க தரைப்படையின் ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் மற்றும் கடலோர AEGIS கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ விரும்புகிறது.

மேலும் ஒரு 5.3 பில்லியன் டாலர்கள் ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளுக்காக செலவிட விரும்புகிறது அதன்படி ஆர்டிக் பிரதேசத்தை முழுமையாக கண்காணிக்கும் OPIR ரேடார், தாழ்வாக பறக்கும் ஏவுகணைகளை கண்காணிக்கும் அமைப்பு ஆகியவை தவிர்த்து 1 பில்லியன் டாலர் செலவில் விண்வெளியில் சென்சார் அமைப்பு ஆகியவற்றை அமைக்கவும்

266 மில்லியன் டாலர்களை புதிய Tomahwak டாமஹாக் ஏவுகணைகள், 395 மில்லியன் டாலர்களை தொலைவு நீட்டிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட டாமஹாக் ஏவுகணைகள், F-35A போர் விமானங்களுக்கான ஏவுகணைகள், 350 மில்லியன் டாலர்கள் மதிப்பில் நீரடிகணைகள் Torpedoes மற்றும் 315 மில்லியன் டாலர்கள் மதிப்பில் கடல்சார் கண்ணிவெடிகளை வாங்கவும் விரும்புகிறது.

இது தவிர இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள தளங்களை மேம்படுத்த குறிப்பாக அதிகளவில் போர் விமானங்களை நிறுத்தும் வசதி, நீர்மூழ்கிகள், போர் கப்பல்கள், ரோந்து கலன்கள், தொலைதூர குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றை நிறுத்தும் வசதி மேலும் குவாமில் ஒரு செயற்கைகோள் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தவும் மேலும் பல புதிய ராணுவ தளங்களை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவற்றை எல்லாம் INDOPACOM 2027ஆம் ஆண்டிற்கு முன்பாக பெற விரும்புகிறது காரணம் 2027ம் ஆண்டை தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் தைவானை கைபற்றுவதற்கான காலகெடுவாக நிர்ணயதித்து உள்ளார் என்பதாகும் ஆனால் அமெரிக்க நிர்வாக மற்றும் அரசியல் சிக்கல்களால் அதற்கு முன் இவற்றை பெற்று கொள்வது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒரு புறம் இந்த முயற்சிகள் அமெரிக்காவுக்கு கை கொடுக்குமா என்ற கேள்விக்கு பதிலாக தற்போது உள்ள நிலையை விட மேம்பட்ட நிலை ஏற்படும் ஆனால் சீனாவை தடுக்கும் அளவுக்கான பலனை தராது என கூறப்படுகிறது காரணம் சீனா உலகிலேயே மிக வேகமாக ராணுவத்தை நவீனபடுத்தியும் அதிகளவில் புதிய ராணுவ தளவாடங்களை சேர்த்தும் வருகிறது.

ஆகவே ஒன்று அமெரிக்கா இந்த திறன்களை பெறும்போது சீனா அதை விட மேம்பட்ட நிலையில் இருக்கும் இல்லையெனில் 2027ஆம் ஆண்டிற்கு முன்பாகவே தைவான் மீதான தனது தாக்குதலை நடத்தும் என கூறப்படுகிறது, என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.