இந்தியா அமெரிக்கா இடையேயான விமானப்படை ஒப்பந்தம் விரைவில் தயார் ஆகும் அமெரிக்க விமானப்படை செயலாளர் !!

  • Tamil Defense
  • March 27, 2023
  • Comments Off on இந்தியா அமெரிக்கா இடையேயான விமானப்படை ஒப்பந்தம் விரைவில் தயார் ஆகும் அமெரிக்க விமானப்படை செயலாளர் !!

அமெரிக்க விமானப்படையின் செயலாளரான திரு. ஃபிராங்க் கென்டால் ஏற்கனவே இந்தியா அமெரிக்கா இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ள நிலையில் விமானப்படை சார்ந்த ஒப்பந்தம் ஒன்றும் விரைவில் தயாராகும் என அறிவித்துள்ளார்.

அதாவது Air Information Sharing Agreement எனப்படும் இந்த தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு வடிவம் கொடுக்க இரண்டு நாடுகளும் கூட்டாக பணியாற்றி வருவதாகவும் இதை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள அவர் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஏற்கனவே இந்தியா அமெரிக்கா உடன் நான்கு முக்கிய அடிப்படை ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது அவையாவன, 2016ஆம் ஆண்டு சரக்கு ஒப்பந்தம், 2018ல் COMCASA எனப்படும் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்

2019ல் ஏற்கனவே கையெழுத்தான GSOMIA எனப்படும் ராணுவ தகவல் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நீட்சியான ISA எனப்படும் தொழிற் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் 2020ல் BECA எனப்படும் புவிசார் ஒத்துழைப்பு சார்ந்த அடிப்படை ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற ஒப்பந்தம் ஆகியவை ஆகும்.

தற்போது இந்த ஒப்பந்தமும் கையெழுத்தானால் இரு தரப்புக்கு இடையேயான ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரிக்க வழிவகுக்கும் என புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.