
அமெரிக்கா சமீபத்தில் தனது மிசவுரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரத்தில் உள்ள Boeing போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான F/A-18 போர் விமான தயாரிப்பு நிலையத்தை 2025ஆம் ஆண்டு புதிய ஆர்டர்கள் கிடைக்காத பட்சத்தில் முட போவதாக அறிவித்ததை அனைவரும் அறிவோம்.
ஆனால் தற்போது இந்தியாவுக்கு இந்த தொழிற்சாலையை நிபந்தனைகளுடன் மாற்ற அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது, அதாவது இந்திய கடற்படைக்கு 26 விமானங்களுக்கு பதிலாக 57 விமானங்களை அதுவும் F-18 விமானங்களை வாங்க முடிவு செய்தால் தொழிற்சாலையை இந்தியாவுக்கு மாற்ற தயார் என தெரிவித்துள்ளது.
MRCBF – Mutli Role Carrier Borne Fighter Jets அதாவது கடற்படை பல திறன் போர் விமானங்கள் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை போர் விமானங்கள் வாங்க விரும்பி அதற்கான தேர்வு மற்றும் சோதனைகளை நடத்தி அறிக்கையை அரசிடம் சமர்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதில் முதலில் 57 போர் விமானங்கள் வாங்க திட்டமிட்ட நிலையில் பின்னர் சுதேசி தயாரிப்பான TEDBF போர் விமான திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் 26 விமானங்களை மட்டுமே வெளிநாட்டில் இருந்து வாங்கவும் மீதமுள்ளவற்றை TEDBF விமானங்களை கொண்டு நிரப்பி கொள்ளவும் திட்டமிடபட்டது.
தற்போது இந்திய கடற்படையை பொறுத்தவரை ரஃபேல் Dassault Rafale மற்றும் Boeing F/A – 18 ஆகிய இரண்டு விமானங்களும் திருப்தி அளித்துள்ள நிலையில் இந்தியா அமெரிக்க ஆஃபருக்கு ஒப்பு கொண்டால் சுதேசி கடற்படை போர் விமான திட்டதிற்கு பின்னடைவு ஏற்படும் என்பது மிகையல்ல.