இங்கிலாந்து கடற்படையின் HMS Tamar எனும் கடலோர ரோந்து கலன் இந்தியா அமெரிக்கா ஃபிரான்ஸ் நியூசிலாந்து ஆஸ்திரேலியா கனடா ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற லா பெரூஸ் கூட்டு பயிற்சியில் பங்கு பெற்று விட்டு தற்போது சென்னை வந்துள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு 13 நாள் சுற்றுபயணமாக வந்துள்ள இக்கப்பலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இந்த கப்பல் இந்திய கடற்படையுடன் பல்வேறு கட்ட கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டது.
இந்திய கடற்படையின் தமிழ்நாடு புதுச்சேரி பகுதி தளபதி ரியர் அட்மிரல் வெங்கட்ராமன் அவர்களை சென்னையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் டீலோ எலியாட் ஸ்மித் மற்றும் தில்லி பிரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள கடற்படை ஆலோசகர் கேப்டன் இயான் லின் ஆகியோர் சந்தித்தனர்.