உக்ரைனுக்கு டாங்கிகளுடன் அணுசார் குண்டுகளை வழங்கும் இங்கிலாந்து; ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • March 24, 2023
  • Comments Off on உக்ரைனுக்கு டாங்கிகளுடன் அணுசார் குண்டுகளை வழங்கும் இங்கிலாந்து; ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை !!

இங்கிலாந்து உக்ரைனுக்கு பதினான்கு Challenger – 2 டாங்கிகளை வழங்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவற்றுடன் DU Shells Depleted Uranium Shells அதாவது உபயோகிக்கப்பட்ட யூரேனியம் குண்டுகளையும் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனை இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பரோன்னஸ் கோல்டி லார்டு ஹில்டன் எனும் அவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் உறுதிப்படுத்தினார், இந்த குண்டுகள் இங்கிலாந்து வழங்கும் டாங்கிகளுக்கு உள்ளேயே இருக்கும் என கூறிய அவர்,

இந்த வகை குண்டுகள் ரஷ்யா கூறுவது போல ஆபத்தானவை அல்ல , கதிர்வீச்சு பாதிப்பு இருக்காது ஆனால் சிறிதளவு விஷத்தன்மை இருக்கும் அதே நேரத்தில் கவச வாகனங்களை தகர்க்க இவை சிறந்த ஆயுதம் எனவும் தெரிவித்தார்.

வழக்கமாக கவசத்தை துளைக்கும் குண்டுகளில் டங்ஸ்டன் Tungsten உலோகம் பயன்படுத்தப்படும் இதன் விலை அதிகம் ஆனால் உபயோகிக்கப்பட்ட யூரேனியம் விலை குறைவானது மேலும் டங்ஸ்டனை விடவும் அதிக வலுவானது ஆகவே உலோகத்தை முற்றிலுமாக துளைத்து செல்லும் திறன் கொண்டது ஆகவே தான் இவற்றை பயன்படுத்த துவங்கினர்.

வளைகுடா போர், ஈராக் போர், போஸ்னியா போர் போன்ற போர்களில் அமெரிக்க தலைமையிலான நேட்டோ NATO படைகள் இத்தகைய குண்டுகளை ஏராளமான எண்ணிக்கையில் பயன்படுத்தின, இன்று வரை இந்த குண்டுகளின் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த குண்டுகளை பயன்படுத்திய வீரர்கள் அதாவது நேட்டோ வீரர்கள் பலரின் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி அடையவில்லை இந்த பாதிப்பு பெண் வீரர்களுக்கு அதிகமாக இருந்தது, இது தவிர பல்வேறு வகையான புற்றுநோய், மூளை இதயம் வெள்ளை அணுக்கள் போன்றவற்றை பாதிக்கும் ஆறு வெவ்வேறு வகையான நோய்களும் பதிவு செய்யப்ப்ட்டுள்ளன.

இந்த வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ள ஈராக், போஸ்னியா நாடுகளில் பொதுமக்கள் பலர் இன்றுவரை இதன் பாதிப்பை அணுபவித்து வருவதாக கூறப்படுகிறது, இந்த வகை குண்டுகள் உலோகத்தை துளைக்கும் போது உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக பொடியாக மாறி விடும்

இந்த பொடி விஷத்தன்மை கொண்டதாகும் இதனை சுவாசிக்கும் போதோ அல்லது உடலில் பட்டாலோ அல்லது அது கலந்து நீரை பருகினாலோ மரபியல் இரத்தம் நரம்பியல் இனப்பெருக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் மேலும் அந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

ரஷ்யா இங்கிலாந்தின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது மேலும் இதனை அணு ஆயுத போராக கருதி பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இங்கிலாந்து 1999 சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறி உள்ளதாகவும் இது நல்லதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்து உள்ளது, பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அமெரிக்கா இத்தகைய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கமாட்டோம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.