இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சுமார் 35,000 கோடி ரூபாய் செலவில் ஐந்து S-400 Triumf வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாவது S-400 படையணியும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாவது படையணியும் இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்பட்டன, அவை முறையே பாகிஸ்தான் எல்லை மற்றும் சீன எல்லையோரம் உள்ள சிலிகுரி சிக்கன் நெக் பகுதியிலும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது S-400 வான் பாதுகாப்பு படையணியின் அமைப்புகள் இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இந்த படையணியானது லடாக் செக்டாரில் நிலைநிறுத்தப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லடாக்கில் சீனா போர் விமானங்களை இறக்கியதற்கு பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது இந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பால் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் மற்றும் வானூர்திகளை சுட்டு வீழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.