90% தயார் நிலையில் எங்கள் போர் விமானங்கள் இருக்கும் இந்தியாவுக்கு உறுதியளித்த SAAB !!
இந்திய விமானப்படைக்கு சுமார் 20 பில்லியன் டாலர்கள் அதாவது 1,50,000 கோடி ரூபாய் மதிப்பில் 114 பல திறன் போர் விமானங்கள் வாங்குவதற்கான முயற்சி நடந்து வருகிறது, இதில் முக்கியமான நிபந்தனை வாங்கப்படும் போர் விமானங்கள் 75% தயார் நிலையுடன் இருக்க வேண்டும் என்பதாகும்.
அதாவது வாங்கப்படும் 114 விமானங்களில் 75% விமானங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும், SAAB நிறுவனம் இந்த போட்டியில் உள்ள நிலையில் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
SAAB நிறுவனத்தின் Gripen E ரக விமானங்கள் வாங்கப்பட்டால் 114 விமானங்களில் சுமார் 90% விமானங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என உறுதி அளித்துள்ளது மேலும் இந்தியாவில் ஒரு கூட்டு தயாரிப்பு நிறுவனத்தை தேடி வருகிறது அதே நேரத்தில் அரசுடன் நேரடியாக இந்தியாவில் அந்த நிறுவனமே தயாரிப்பு பணியில் ஈடுபட முடியுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது.
Gripen E விமானம் சுதேசி TEJAS MK-2 விமானத்தை போல 16.5 டன் ரகத்தை சேர்ந்ததாகும் மேலும் இரண்டு விமானங்களிலும் அமெரிக்க GE F-414 என்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது ஆகவே மிகப்பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் இருக்காது எனவும்
இது தவிர Astra mk1 , Astra Mk2 போன்ற இந்திய ஆயுதங்களை கூட Gripen E விமானத்தில் எளிதாக இணைக்க முடியும் எனவும் Dassault Rafale போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் Meteor BVRAAM ஏவுகணையையும் இணைக்க முடியும் எனவும் இதனால் இந்திய விமானப்படை சிரமமின்றி இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.