உக்ரேன் மீது ஆறு ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசிய இரஷ்யா

  • Tamil Defense
  • March 12, 2023
  • Comments Off on உக்ரேன் மீது ஆறு ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசிய இரஷ்யா

மூன்று வாரங்களில் உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலை இரஷ்யா நிகழ்த்தியுள்ளது. வியாழன் அதிகாலையில் வான் பாதுகாப்பைத் தாண்டிதாக்க கடைிய ஆறு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா உக்ரேன் மீது ஏவியது.

10 பிராந்தியங்களில் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். ஒரு குடியிருப்பு மீது ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இரஷ்யா தனது கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் ஆறு ஏவுகணைகளை ஏவியது, இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். இவற்றை உக்ரைன் சுட்டு வீழ்த்துவதற்கு வழி இல்லை என உக்ரேன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.