நீர்மூழ்கி கப்பல் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷ்யா !!

இந்த ஆண்டு ரஷ்ய கடற்படை ஐந்து நீர்மூழ்கி கப்பல்களை படையில் இணைக்க உள்ளது அவற்றில் மூன்று அணுசக்தி மற்றும் இரண்டு டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களாகும்.

இவற்றை ரஷ்யாவின் United Shipbuilding Corporation நிறுவனம் கட்டமைத்து உள்ளது இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் அலெக்செய் ராக்மனோவ் பேசுகையில் இனியும் புதிய ஆர்டர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்த வேகத்தில் சென்றால் ரஷ்ய கடற்படை உலகிலேயே அதிக நீர்மூழ்கி கப்பல்களை வைத்துள்ள பெருமையை பெறும் என கூறப்படுகிறது, தற்போது ரஷ்யாவிடம் 64 அமெரிக்காவிடம் 72 சீனாவிடம் 79 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.