அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை வீழ்த்திய Su-27 போர் விமானிகளுக்கு விருது- இரஷ்யா அறிவிப்பு
1 min read

அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை வீழ்த்திய Su-27 போர் விமானிகளுக்கு விருது- இரஷ்யா அறிவிப்பு

அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோனை வீழ்த்திய Su-27 போர் விமானிகளுக்கு மாநில விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இரஷ்யா கூறியுள்ளது.

அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோன் மூலம் எல்லை மீறலை “தடுத்த” Su-27 போர் விமானங்களின் விமானிகளை ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு  விருதுகளுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க MQ-9 ரீப்பர் ட்ரோன் கருங்கடலில் உளவு பணியில் ஈடுபட்ட பின்னர், அதை இடைமறிக்க ரஷ்ய போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.

இந்த விமானங்கள் ரீப்பர் ட்ரோனை செயலிழக்கச் செய்து வீழ்த்தியது.இது குறித்த கானொளி நமது இந்திய இராணுவச் செய்திகள் முகநூல் பக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.