
திங்கட்கிழமை காலை அன்று ரஷ்ய சரக்கு கப்பல் ஒன்று ஃபிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டன்கிர்க் துறைமுகத்தில் 25 சிலிண்டர்களில் செறிவுட்டப்பட்ட யூரேனியத்தை டெலிவரி செய்துள்ளது.
உக்ரைன் போர் துவங்கிய பிறகு மட்டுமே இதுவரை ஏழு முறை ரஷ்யாவிடம் இருந்து தனது அணு உலைகளுக்காக ஃபிரான்ஸ் செறிவுட்டப்பட்ட யூரேனியத்தை வாங்கி உள்ளதாகவும், இந்த இறக்குமதியை Greenpeace அமைப்பு முற்றிலும் முறைகேடானது என காட்டமாக விமர்சனம் செய்து உள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டிற்கான 15% செறிவூட்டல் பணிகளை ரஷ்யா மேற்கொள்கிறது என்பதும் கடந்த ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டின் மின்சார நிறுவனமான EDF ரஷ்யாவில் இருந்து 153 டன் யூரேனியத்தை வாங்கி உள்ளதாகவும்
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை 7000 டன் யூரேனியம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் அது ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுவது மற்றும் ஃபிரான்ஸ் நேரடியாக கனடா நைஜர் உஸ்பெகிஸ்தான் கஸகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் நேரடியாக தோண்டி எடுக்கும் யூரேனிய கனிமங்கள் எனவும் ஃபிரான்ஸ் விளக்கம் அளித்துள்ளது.