
சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார் பின்னர் அங்கிருந்து புறப்படும் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறிய கருத்துக்கு ரஷ்ய அதிபர் ஆமோத்தித்தது உலகளாவிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது சீன அதிபர் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றத்தை நாம் தற்போது ஏற்படுத்தி அதனை முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என கூறிய போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதற்கு ஆம் என கூறி ஆமோதித்தார்.
இங்கு மாற்றம் என கூறப்பட்டிருப்பது மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா தலைமையில் அதாவது முதலாம் உலகப்போர் காலத்தில் இருந்து உலகின் மீது செலுத்தி வரும் ஆதிக்கத்தை தற்போது சிறிது சிறிதாக உடைத்து வருவதாகும்.
தற்போது சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் முன்னனியில் உள்ளன, இந்தியா சவுதி போன்ற மேலும் பல நாடுகள் தாங்களாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல சீன அதிபரின் ரஷ்ய பயணத்தின் போது சீனா ரஷ்யா இடையே எல்லையற்ற கூட்டுறவு எனும் ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த உக்ரைன் போருக்கு மூன்று வாரங்கள் முன்னர் இருநாடுகளும் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஒப்பந்தம் மூலமாக இரண்டு நாடுகளும் அனைத்து துறைகளிலும் எல்லையற்ற கூட்டு செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளன, இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் புதிய உயரத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சீன அதிபரின் கருத்துக்கு ரஷ்ய அதிபர் ஆமோதித்துள்ளது உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதே போல புவிசார் அரசியல் நிபுணர்கள் இதனை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட கூடியது இல்லை எனவும் இனி நடக்க உள்ள பல்வேறு விஷயங்களுக்கு இது ஒரு சமிக்ஞை எனவும் கூறுகின்றனர்.