ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் ஜக் மோகன் நாத் இந்திய விமானப்படையின் தலைசிறந்த போர் விமானிகளில் ஒருவர் ஆவார், இவர் போர் காலத்தில் வழங்கப்படும் நாட்டின இரண்டாவது உயரிய விருதை இரண்டு முறை பெற்ற சாதனையாளர் ஆவார்.
இவர் 1948ல் தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள Air Force Administrative College எனப்படும் விமானப்படை நிர்வாக கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்று 1950ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக இணைந்தார்.
அப்போது பிரிட்டிஷ் தயாரிப்பான English Electric Canberra விமானத்தை இயக்கி வந்த இந்திய விமானப்படையின் Lynxes என அழைக்கப்படும் No:106 Squadron 106ஆவது படையணியில் சேவையாற்றினார், பின்னர் 1970ஆம் ஆண்டு ஒய்வு பெற்ற அவர் ஏர் இந்தியாவில் இணைந்தார், இவருக்கு சுமார் 3275 மணி நேர பறக்கும் அனுபவம் உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.
படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஸ்க்வாட்ரன் லீடர் Squadron Leader ஆக இருக்கும் போது 1962 சீன போரில் தனது Caberra நடுத்தர குண்டுவீச்சு மற்றும் வேவுபார்க்கும் விமானத்தில் சென்று திபெத் மற்றும் அக்சாய் சின் பகுதிகளில் உளவு பார்த்து தந்த தகவல்கள் இந்திய படைகளுக்கு பெரும் உதவியாக அமைந்தன.
அதன்பிறகு 1965 பாகிஸ்தான் போரிலும் தனது Canberra விமானத்தில் பாகிஸ்தானுக்குள் 30 முறை ஊடுருவி குறிப்பாக பாகிஸ்தானின் இதயமான லாகூர் நகரம், இச்சோகில் மற்றும் சர்கோதா பகுதிகளை வேவு பார்த்து தகவல்களை திரட்டினார்.
இந்த இரண்டு வீர தீர போர் நடவடிக்கைகளுக்காக இரண்டு முறை நாட்டின் இரண்டாவது உயரிய போர்க்கால விருதான MvC Maha Vir Chakra மஹா வீர சக்கரம் விருதை பெற்றார் இந்த சாதனையை புரிந்த ஒரு விமானப்படை வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இவர் பல முறை சீன ஆக்கிரமிப்பு செய்துள்ள கிழக்கு லடாக் பகுதியில் பறந்துள்ளார் ஒரு முறை இது பற்றி அளித்த பேட்டியில் “அவர்களால் (சீனர்கள்) என்னை தெளிவாக பார்க்க முடிந்தது பல முறை எனது விமானத்தை நோக்கி சுட்டனர் ஆனால் அப்போது அந்த பகுதியில் அவர்களிடம் விமானப்படை இல்லாததால் அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினார்.
அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் விங் கமாண்டர் JM Nath மார்ச் 21ஆம் தேதி அவரது ஆருயிர் மனைவியான மறைந்த திருமதி உஷா நாத் அவர்களுடன் இணைந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது, பல மூத்த இன்னாள் முன்னாள் விமானப்படை அதிகாரிகள் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளனர்.