நாட்டின் பிரதான வானூர்தி தயாரிப்பு நிறுவனமான HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிம்பெட் நிறுவனமானது தன்னுடைய தொழிற்சாலை ஒன்றில் இருந்து இரண்டு வெவ்வேறு ஹெலிகாப்டர்களை தயாரிக்க முடியும் என அறிவித்துள்ளது.
அதாவது கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையில் ரஷ்யாவின் காமோவ் Kamov Ka-226T மற்றும் சுதேசி LUH – Light Utility Helicopter ஆகியவற்றை தலா 30 வீதம் ஆண்டுக்கு 60 ஹெலிகாப்டர்கள் என்ற அளவுக்கு தயாரிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1960களில் வாங்கப்பட்டு இன்று வரை இந்திய தரைப்படை கடற்படை மற்றும் விமானப்படைகளில் பயன்பாட்டில் உள்ள சுமார் 400க்கும் அதிகமான அரத பழைய Chetak மற்றும் Cheetah ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக புதிய இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்ட போது
ஒட்டுமொத்த தேவையான 400 ஹெலிகாப்டர்களில் தலா 200 வீதம் LUH மற்றும் Ka-226T என ஆர்டரை பிரிக்க முடிவு செய்யப்பட்டது, ஆனால்
இது தொடர்பாக இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளதால் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இரண்டும் ஒரே அளவு மற்றும் எடையை கொண்டுள்ளதால் இந்திய LUH க்கு அனைத்து ஆர்டர்களுக்கும் கொடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், LUH ஒற்றை என்ஜின் கொண்டது ஆனால் Ka-226T இரட்டை என்ஜின் கொண்டது மேலும் அதிக சக்தியை வெளிபடுத்தும் எனவே இயல்பாகவே அதனை அதிக உயர பகுதிகளில் இயக்குவது எளிதானது மற்றும் பாதுகாப்பானது என மற்றொரு தரப்பும் கூறுகின்றன.