மீண்டும் ட்ரோன் ஆர்டர்களை பெற்ற புனே நிறுவனம் !!
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயங்கி வரும் Sagar Defence Engineering எனும் தனியார் நிறுவனம் மீண்டும் இந்திய கடற்படையிடம் இருந்து கண்காணிப்பு ட்ரோன்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய கடற்படைக்கு மேற்கண்ட நிறுவனம் 30 கண்காணிப்பு ட்ரோன்களை சப்ளை செய்து 2022ஆம் ஆண்டில் அவை முழு பயன்பாட்டிற்கு வந்தன தற்போது மீண்டும் ஆர்டர் கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெலிவரி செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட அதிநவீன ஆளில்லா விமானத்தின் செயல்பாடுகளால் மிகவும் திருப்தி அடைந்த நிலையில் தான் தற்போது இந்திய கடற்படை சுமார் 60 ஆளில்லா விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த ட்ரோன் கடும் காற்று மற்றும் மோசமான கடல் சூழலில் கூட மிக சிறப்பாக இயங்கும் திறன் கொண்டது, மணிக்கு 45 மைல் வேகத்தில் 3 கிலோ எடையுடன் 20 கிலோமீட்டர் தூரம் வரை சென்று கண்காணிக்கும் மற்றும் தொடர்ந்து 2 மணிநேரம் பறக்கும் திறனும் கொண்டது என்பது கூடுதல் தகவல் ஆகும்.