
இந்திய கடற்படைக்காக 26 MRCBF – Multi Role Carrier Borne Fighter பல திறன் கடற்படை போர் விமானங்களை வாங்கும் போட்டியில் ஃபிரான்ஸ் தயாரிப்பு Dassault Rafale மற்றும் அமெரிக்க Boeing F/A – 18 Super Hornet ஆகிய இரண்டு விமானங்களும் சோதனைகளில் வெற்றி பெற்று கடற்படைக்கு திருப்தி அளித்துள்ளன.
இரண்டு விமானங்களில் எதை வாங்குவது எனும் முடிவை அரசிடமே விட்டுள்ளதாக இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் சில வாரங்கள் முன்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த இரண்டு விமானங்களும் ஒவ்வொரு தனி விமானத்தின் விலை மற்றும் அவற்றின் ஆயுட்காலத்தில் ஆகும் செலவின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக குறைந்த விலைக்கு அளிக்க தயாராக உள்ள ஒப்பந்ததாரருக்கு தான் ஒப்பந்தத்தை வழங்கும் இந்த L1 அடிப்படையில் வழங்கும் முறையில் பெரிதாக இரண்டுக்குமான திறன் வித்தியாசங்கள், செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகள் ஆகியவை கணக்கில் வராது.
ஒரு ரஃபேல் எம் Rafale M ரக விமானத்தின் விலை 115 மில்லியன் டாலர்கள் ஆகும் ஆனால் F/A-18 விமானத்தின் விலை 67 மில்லியன் டாலர்கள் ஆகும் ஆனால் அமெரிக்க போர் விமானத்திற்கான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளை சேர்த்தால் அதன் விலை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.