தில்லி பிரிட்டிஷ் தூதரகத்தின் பாதுகாப்பு நீக்கம் உடனடியாக லண்டன் இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் !!

  • Tamil Defense
  • March 23, 2023
  • Comments Off on தில்லி பிரிட்டிஷ் தூதரகத்தின் பாதுகாப்பு நீக்கம் உடனடியாக லண்டன் இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் !!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் பின்னர் இந்திய தேசிய கொடியை இழுத்து அட்டுழியம் செய்தனர்.

இதனை லண்டன் காவல்துறை லண்டன் நகர நிர்வாகம் மற்றும் இங்கிலாந்து அரசு உடனடியாக தடுத்திருக்க வேண்டும், இந்திய தூதரகத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டியது அவசியமானது.

காரணம் தூதரக உறவிற்கான வியன்னா ஒப்பந்தத்தின் 22ஆவது ஷரத்தின்படி அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அவற்றின் சொத்துக்கள் அங்கு பணிபுரிவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும் இதனை இங்கிலாந்து மீறியது.

இதனையடுத்து இந்தியா தனது எதிர்ப்பை இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரை சம்மன் செய்து தெரிவித்தது, லண்டனில் உள்ள இந்திய தூதரும் இங்கிலாந்து அரசிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில் இந்திய தலைநகர் தில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் மற்றும் இங்கிலாந்து தூதரின் வீடுகளுக்கான பாதுகாப்பை இந்திய அரசு தீடிரென நேற்று விலக்கி கொண்டது, அது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இங்கிலாந்து அரசு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு 6 அடுக்கு பாதுகாப்பு, 12 காவல்துறை வாகனங்கள் நிரம்ப காவலர்கள் மற்றும் குதிரைப்படை காவலர்கள் என பலத்த பாதுகாப்பை வழங்கியது.

இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் இங்கிலாந்து அரசும் இந்திய கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்து இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்றால் மிகையாகாது.