இந்தியாவிடம் இருந்து மேலதிக பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க பிலிப்பைன்ஸ் திட்டம் !!
1 min read

இந்தியாவிடம் இருந்து மேலதிக பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க பிலிப்பைன்ஸ் திட்டம் !!

கடந்த ஆண்டு 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தரையில் இருந்து ஏவப்படும் பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏற்றுமதி செய்ய ஃபிலிப்பைன்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மேலதிக பிரம்மாஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஃபிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டி வருவதாகவும் இதன் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இரண்டாவது தொகுதிக்கான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் பற்றி ஃபிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது அவர் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

முதல் தொகுதி 3 பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளுக்கான ஒப்பந்தம் ஃபிலிப்பைன் மரைன் கோர் படைக்கானது என்பதும் அவற்றின் டெலிவரி இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.