பாதுகாப்பு அமைச்சகத்திற்கான இந்தாண்டு பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் !!

  • Tamil Defense
  • March 25, 2023
  • Comments Off on பாதுகாப்பு அமைச்சகத்திற்கான இந்தாண்டு பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள் !!

பாதுகாப்புக்கான பாராளுமன்ற நிலைக்குழு Parliamentary SCOD ( Standing Committee on Defence) இந்த ஆண்டு பாதுகாப்பு துறை சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் சில முக்கிய பரிந்துரைகளை வலியுறுத்தி உள்ளது.

முதலாவதாக இந்திய கடற்படைக்கு மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவைப்படுகிறது, மத்திய அரசு இது தொடர்பாக விரைந்து இறுதி முடிவை எடுக்க வேண்டும், இந்தியாவின் கடல்சார் வலுவை அதிகபடுத்தும் நோக்கில் இதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம் எனவும்

அதே போல் அரசு போர் விமான கொள்முதலில் சுணக்கம் காட்ட கூடாது ஏற்கனவே போர் விமான கொள்முதலில் மிக மிக அதிக அளவில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு வானூர்தி தயாரிப்பு திட்டங்கள் மெருகேறி வந்தாலும் எதிர்கால போர் களத்திற்கான அடுத்த தலைமுறை விமானங்களின் தேவை நிலவுகிறது ஆகவே ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இறக்குமதி செய்வது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும்

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் HAL – Hindustan Aeronautics Limited நிறுவனம் இந்திய விமானப்படைக்கு 40 இலகுரக தேஜாஸ் போர் விமானங்களை டெலிவரி செய்வதில் கால தாமதம் செய்வதை கண்டறிந்து உள்ளதாகவும் இதை சீர் செய்ய வேண்டும் எனவும்

மேலும் இந்திய விமானப்படைக்கான 20 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட 114 பல திறன் நடுத்தர போர் விமானங்களுக்கான திட்டம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை இந்திய விமானப்படையின் படையணி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இது முக்கியமான திட்டம் ஆகவே விரைந்து செயல்படுத்துமாறும்

Tejas Mk1A , Tejas Mk2 , AMCA ஆகிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் தற்போது இந்திய விமானப்படையின் 30 படையணி எண்ணிக்கையை மேலும் குறையாமல் தடுத்து அங்கீகரிக்கப்பட்ட 42 படையணி எண்ணிக்கையை எட்ட வழிவகை செய்ய வேண்டும் எனவும் அந்த குழு மார்ச்-21 சமர்பித்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.