முப்படைகளிலும் ஒன்றரை லட்சம் காலி பணியிடங்கள் மத்திய அரசு தகவல் !!

  • Tamil Defense
  • March 30, 2023
  • Comments Off on முப்படைகளிலும் ஒன்றரை லட்சம் காலி பணியிடங்கள் மத்திய அரசு தகவல் !!

மாநிலங்களவையில் திங்கட்கிழமை அன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் முப்படைகளிலும் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அதாவது தரைப்படையில் 1.36 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதில் 8,129 அதிகாரிகள் பணியிடங்கள் அடக்கம் எனவும், கடற்படையில் 12,428 காலிபணியிடங்கள் உள்ளதாகவும் அதில் 1653 அதிகாரிகள், 29 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 10746 வீரர்கள் பணியிடங்கள் அடக்கம் எனவும்,

இந்திய விமானப்படையில் 7031 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதில் 721 அதிகாரிகள் பணியிடங்கள், 4734 வீரர்கள், 16 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 113 மருத்துவ பிரிவு வீரர்கள் பணியிடங்கள் அடக்கம் எனவும்,

ராணுவ செவிலியர் சேவைகள் Military Nursing Service பிரிவில் 509 காலி பணியிடங்கள் உள்ளதாகவும், தரைப்படையில் 252 Group A, 2549 Group B, 35,368 Group C, விமானப்படையில் 22 Group A, 1303 Group B, 5531 Group C கடற்படையில் 165 Group A, 4207 Group B, 6156 Group C சிவிலியன் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்சேர்ப்பை அதிகரிக்க பல்வேறு வகைகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அஜய் பட் கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.