ஜம்மு விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்புப் படையினரால் (NSG) முழு அளவிலான விமானக் கடத்தல் எதிர்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை ஜம்மு விமான நிலையத்தில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI), மாநில அரசு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு ஆகிய அனைத்து முக்கிய பிரிவுகளும் ஈடுபட்டனர்.
“பயங்கரவாதிகள் விமானத்தை கடத்துவதும் அதனை தொடர்ந்து கடத்தல்காரர்களின் தலையீடு மற்றும் அதிகாரம் செலுத்துதல் மற்றும் கடத்தல்காரர்களுடனான பேச்சுவார்த்தைகள் அதன் பிறகு தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் எதிர்ப்பு நடவடிக்கை உட்பட முழு நிகழ்வுகளின் பயிற்சி நடைபெற்றது.

இத்தகைய நெருக்கடியின் போது செய்யப்படும் செயல்முறைகளை சரிபார்க்க இந்த பயிற்சி ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. மதியம் ஜம்முவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒன்று பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டது.