நடுத்தர பயிற்சி போர் விமானங்களை இறக்குமதி செய்யும் திட்டமில்லை இந்திய விமானப்படை !!
சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டு ஊடகங்களில் இந்தியா அர்ஜென்டினாவின் பொதுத்துறை நிறுவனமான FMA, Dornier நிறுவனத்தின் உதவியோடு தயாரிக்கும் IA – 36 Pampa 2 நடுத்தர பயிற்சி விமானத்தை இந்தியா வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதற்கு காரணமாக HAL நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்து வரும் HJT-36 Sitara நடுத்தர பயிற்சி போர் விமான திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களால் இந்திய விமானப்படை இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்திய விமானப்படை நடுத்தர பயிற்சி போர் விமானங்களை இறக்குமதி செய்யும் திட்டமில்லை என மறுப்பு தெரிவித்து உள்ளது.
ஆனால் இந்திய விமானப்படைக்கு உண்மையிலேயே நடுத்தர பயிற்சி போர் விமானங்கள் தேவைப்படுகிறது, தற்போது அடிப்படை பயிற்சிக்கு Pilatus PC-7 விமானமும், மேம்பட்ட பயிற்சிக்கு Hawk Mk-132 விமானமும் உள்ளது ஆனால் நடுத்தர பயிற்சி விமானங்கள் போதிய அளவில் இல்லை ஆகவே 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இதற்காக டென்டர் விட்டது.
இந்த நிலையில் 2014ல் ஆட்சி மாறிய போது பின்னர் வந்த பாஜக அரசு டென்டரை ரத்து செய்தது மேலும் HJT-36 ரக சுதேசி நடுத்தர பயிற்சி விமானங்களையே வாங்குவதற்கு இந்திய விமானப்படையை அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.