
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டிகியானா பகுதியில் Jammu & Kashmir Rifles ரெஜிமென்ட் பிரிவின் தளத்தில் ஒரு மெகா முன்னாள் படை வீரர்கள் மற்றும் விதவைகள் சந்திப்பு நடைபெற்றது, இதில் வடக்கு பிராந்திய தரைப்படை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதி கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசும்போது இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதே நேரத்தில் படைகளும் முழு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பாகிஸ்தான் இந்தியா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் உள்ள நிலைமை பற்றி பேசும்போது சில ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றதாகவும் ஆனால் அவற்றை எல்லாம் முறியடித்து விட்டதாகவும்
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை மிகப்பெரிய அளவில் நிலைமை கட்டுபாட்டில் தான் உள்ளது சிவில் நிர்வாகத்துடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.