
சீன தரைப்படை அதிகாரியான ஜெனரல் லி ஷாங்கஃபு ஒருமனதாக சீன தேசிய மக்கள் காங்கிரஸ் அதாவது பாராளூமன்றத்தால் அந்நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார், இவரது இந்த நியமனம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு காரணம் இவர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது ஆகும், ஆனாலும் சீனாவில் இவருக்கு பெரும் மதிப்பு உள்ளது அதற்கு காரணம் சீனாவுக்கு ரஷ்யாவில் இருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் Su-35 கனரக பல திறன் போர் விமானங்கள் கிடைக்க காரணமாக இருந்தார் என்பதாகும்.
கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து மேற்குறிப்பிட்ட தளவாடங்களை வாங்குவதில் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்பு காரணமாக தான் அமெரிக்க அரசு அவர் மீது அந்த ஆண்டிலேயே தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் இவர் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளார்.
அதாவது சீன ராணுவத்தை வலிமைப்படுத்தவும் நவீனப்படுத்தவும் அதிபர் ஜி ஜின்பிங் வைத்துள்ள இலக்குகளை அடைவதற்கு ராணுவ அதிகாரியும் தொழில்நுட்ப அறிவாற்றல் கொண்ட விமானவியல் பொறியாளரான ஜெனரல் ஷாங்கஃபு உதவுவார் எனும் நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.