பாதுகாப்பு படைகளுக்கான மெகா ஒப்பந்தங்கள்- பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி
1 min read

பாதுகாப்பு படைகளுக்கான மெகா ஒப்பந்தங்கள்- பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

ராணுவத்திற்கு 70,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க அரசு ஒப்புதல் !!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC – Defence Acquisition Council பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் சுமார் 70,500 கோடி ரூபாய் மதிப்பிலான வெவ்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்புதலை புதன்கிழமை அளித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலான தளவாடங்கள் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக IDDM – Indigenously Desinged Developed & Manufactured அதாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவையாக தான் இருக்கும் என பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

இதில் இந்திய கடற்படையின் பங்கு தான் மிகப்பெரியது அதாவது 56000 கோடி ரூபாய் மதிப்பில் 200 பிரம்மாஸ் ஏவுகணைகள், ஷக்தி மின்னனு போர்முறை அமைப்பு, கடல்சார் இலகுரக ஹெலிகாப்டர்கள், சுதேசி கடல்சார் என்ஜின் போன்ற இந்திய தயாரிப்புகள் பங்கு தான் அதிகம்.

இந்திய விமானப்படையை பொறுத்தவரை அதனுடைய Su-30 MKI கனரக பல திறன் போர் விமானங்களில் LRSOW – Long Range Standoff Weapon அதாவது பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டே தொலைதூர இலக்குகளை தாக்க உதவும் ஏவுகணைகளை வாங்க பொருத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, இந்திய கடலோர காவல்படைக்கு ALH MK3 கடல்சார் ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரைப்படைக்கு 155 ATAGS பிரங்கிகள், HMV – High Mobility Vehicles மற்றும் பிரங்கிகளை இழுத்து செல்லும் GTV – Gun Toving Vehicles ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒப்புதல்களை சேர்த்தால் 2022-2023 நிதியாண்டில் இந்திய முப்படைகள் மற்றும் கடலோர காவல்படைக்கு சுமார் 2 லட்சத்து 71 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் அவற்றில் 99% இந்திய தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.